ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்

பாப்பாரப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு கோரிக்கை அட்டை அணியும் போராட்டம் நடைபெற்றது.;

Update: 2021-08-31 13:15 GMT
ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்

பாப்பாரப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு கோரிக்கை அட்டை அணியும் போராட்டம் நடைபெற்றது.

  • whatsapp icon

தமிழக அரசு அகவிலைப்படி வழங்குவதற்கான அரசு ஊழியர் சங்கத்தினர் உடன்  நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்படாத காரணத்தால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்தனர். அதன் படி இன்று மாநிலம் முழுவதும் அனைத்து அரசு ஊழியர்களும் கோரிக்கை அட்டை அணியும் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக இன்று தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பு மருத்துவர் சக்திவேல் தலைமையில் கோரிக்கை அட்டை அணியும் போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில அரசு ஊழியர் சங்க தலைவி தமிழ்ச்செல்வி, சுகாதாரத்துறை மாவட்ட செயலாளர் தேன்மொழி மற்றும் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News