10 ஆண்டுகளுக்குப் பின் நாகாவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: விவசாயிகள் மகிழ்ச்சி

பென்னாகரம் அருகே 10 ஆண்டுகளுக்குப் பின் நாகாவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2021-11-14 07:15 GMT

நாகாவதி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு. 

தருமபுரி மாவட்டத்தில், நேற்று மாலை ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதே போல் பென்னாகரம் அடுத்துள்ள நாகர்கூடல்,ஏலகிரி,நாகாவதி அணை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று இரவு விடிய விடிய பெய்த தொடர் மழையால் நாகாவதி ஆற்றில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நாகாவதி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆற்றில், சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவு வரை தண்ணீர் தேங்கி நிற்பதால், அரகாசனஅள்ளி, ஆர்.ஆர்.அள்ளி, பூதநாயக்கன்பட்டி, சின்னம்பள்ளி, பெரும்பாலை சோளிகவுண்டனூர், பெத்தானூர் உள்ளிட்ட 10 கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும்,மேலும் நிலத்தடி நீரும் உயரும் என்பதால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்சியடைந்துள்ளனர்.

மேலும் இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்தால் நாகவதி அணை முழு கொள்ளளவை எட்டினால் விவசாயத்திற்காக தண்ணீா் திறந்து விடப்படும். இதனால் 22கிலோமீட்டர் தொலைவு வரை விவசாய பாசனத்திற்கு கால்வாய் மூலம் தண்ணீர் திறந்தால் விவசாயம் செழிக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News