ஒகேனக்கல்லில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில் ஆய்வு
ஒகேனக்கல்லில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை பார்வையிட்டார்.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தை மேம்படுத்துதல் தொடர்பாக, சுற்றுலாத்துறை அமைச்சர் மரு.மா.மதிவேந்தன் இரண்டாம் நாளாக நேற்று, ஒகேனக்கலில் பல்வேறு இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மீன் விற்பனை செய்யும் கூடம், சமையல் செய்யும் கூடம், இளைஞர்கள் விடுதி, சிறுவர் பூங்கா, முதலை பண்ணை, அரசு மீன் பண்ணை, வாகனங்கள் நிறுத்தும் இடம், ஊட்டமலை பரிசல் துறை, வண்ண மீன் காட்சியகம், தமிழ்நாடு சுற்றுலா விடுதி அறைகள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலாத்துறை அமைச்சர் மரு.மா.மதிவேந்தன் நேரில் பார்வையிட்டார்.
இப்பகுதிகளை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் ச.திவ்யதர்சினி, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி ஆகியோர் உடனிருந்தனர்.
ஆய்வில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வைத்திநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.என்.பி.இன்பசேகரன், தடங்கம் பி.சுப்பிரமணி, மாவட்ட சுற்றுலா அலுவலர் ஸ்ரீபாலமுருகன், பென்னாகரம் வட்டாட்சியர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வடிவேலன், ஜெகதீசன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.