தர்மபுரி மாவட்டத்தில் வானிலை சார்ந்த வேளாண் ஆலோசனை

தர்மபுரி மாவட்டத்தில் வானிலை சார்ந்த வேளாண் ஆலோசனை நடைபெற்றது.;

Update: 2021-12-08 06:30 GMT

பைல் படம்

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் மா.விஜயகுமார், மா.அ .வெண்ணிலா மற்றும்  சிந்து வானிலை பதிவாளர் ஆகியோர் வானிலை அடிப்படையில் வேளாண் ஆலோசனைகளை தெரிவித்துள்னர்.

டிசம்பர் 6 முதல் 8-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

இதன் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நெற்பயிரில் மஞ்சள் கரி பூட்டை நோய் தாக்கம் வாய்ப்புள்ளதால் இதனைக் கட்டுப்படுத்த புரோபிகானோசோல் ஒரு மில்லி/லிட்டர் என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

மேலும் மாவில் அந்த்ரக்னோஸ் இலைப்புள்ளி நோய் தாக்குதல் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதனை கட்டுப்படுத்த மேங்கோசெப் பூஞ்சாணக் கொல்லி 3 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். (அல்லது) புரோபிகானோசோல் 1.5 கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் இலை வழியாக தெளித்து கட்டுப்படுத்தலாம், என தெரிவித்துள்னர்

Tags:    

Similar News