பென்னாகரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பழைய பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-09-10 12:45 GMT

பென்னாகரத்தில் திரிபுரா மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திரிபுரா மாநிலத்தில் மாநில மக்கள் கட்சியின் மாநில தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட வட்ட அலுவலகங்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நகர பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் பென்னாகரம் தொகுதி குழு செயலாளர் கே அன்பு தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் பிஎம் முருகேசன், சின்னம்பள்ளி பகுதி குழு செயலாளர் சக்திவேல், பென்னாகரம் நகர செயலாளர் எஸ் வெள்ளிங்கிரி, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிஜேபி ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்

Tags:    

Similar News