கலைமாமணி விருது வழங்க வலியுறுத்தி நாட்டுப்புற கலைஞர்கள் சங்கம் கோரிக்கை
நாட்டுப்புற கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் சங்கம் கோரிக்கை;
நாட்டுப்புற கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கவேண்டும்.தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் சங்கம் கோரிக்கை
நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் சங்க மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் சோமனஅள்ளி பச்சையம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாநில தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சின்னசாமி வரவேற்புரை ஆற்றினார். மாநில துணைத் தலைவர் சின்னசாமி முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் டாக்டர்.சிவகுமார் துவக்கிவைத்துப் பேசினார். மாநில கௌரவ தலைவர் பேராசிரியர் காளீஸ்வரன் சிறப்புரையாற்றினார். மாநில நிர்வாகிகள் அண்ணைபாலன், சாரதி, முருகசாமி, துரைசந்தோசு, தர்மபுரி மாவட்ட செயலாளர் வேலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சம்பத் நன்றி கூறினார்.
ஆண்டு தோறும் சிறந்த நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு தமிழக அரசு வழங்கும் கலைமாமணி விருது வழங்கவேண்டும், கடந்த ஆண்டு கொரோனா பொதுமுடக்க் காலத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் நடத்திய நாடக் கலைவிழாவை ஒட்டி நூறு நாட்கள் தொடர் நாடகங்கள் நடத்திய தர்மபுரி மாவட்ட தெருக்கூத்து கலைஞர்களுக்கு பல்கலைக்கழகம் சான்றிதழ் மற்றும் நிதியுதவி வழங்க வேண்டும், அச்சுப் பிரதிகளாக அடித்துத் தருகிறோம் என்று கூறிபல்கலைக் கழகத்தினர் பெற்றுச் சென்ற தருமபுரி மாவட்ட தெருக்கூத்து கலைஞர்கள் படைப்பாக்க ரீதியில் எழுதிய நாடகக் குறிப்புகள்- பணுவல்களை கலைஞர்களிடமே திரும்ப வழங்க வேண்டும், நாடக- திரைக் கலைஞர் கே.பி.சுந்தராம்பாளுக்கு இயல் இசை நாடக மன்றம் முன்பு உருவச்சிலை வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.