பென்னாகரத்தில் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து உணவு வழங்கும் திட்டம்
பென்னாகரத்தில் குழந்தைகளுக்கு இரும்புச்சத்து உணவு வழங்கும் திட்டத்தை கலெக்டர் திவ்யதர்ஷினி தொடங்கி வைத்தார்.
பென்னாகரம் அருகே சமத்துவபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி, தலைமையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப்பணிகள் சார்பில், இரும்புச் சத்து குறைபாட்டினால் குழந்தைகளிடையே ஏற்படும் இரத்த சோகையினைக் குறைத்திடும் வகையில் அங்கன்வாடி மையங்களுக்கு, முன்பருவக் கல்வி பயில வருகை தரும் 2 முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இரும்புச்சத்து மிகுந்துள்ள எள்ளு மற்றும் வெல்லம் கலந்த எள்ளு மிட்டாய் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திமுக தர்மபுரி மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பி.என்.பி. இன்பசேகரன், பென்னாகரம் ஒன்றியக்குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேல், மாவட்ட கவுன்சிலர் ஏரியூர் ஒன்றிய கழக செயலாளர் செல்வராஜ் ஊராட்சி மன்ற தலைவர் ராணி முனிராஜ், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மோனிகா தங்கராஜ் கார்த்திக், மேற்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் காளியப்பன், பேரூர் செயலாளர் வீரமணி, பொருளாளர் முருகேசன் மாவட்ட பிரதிநிதி சிவக்குமார், கமலேசன் வையாபுரி மற்றும் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.