ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரிப்பு 10 ஆயிரம் கன அடியாக உயர்வு

கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.;

Update: 2021-07-18 05:45 GMT

ஒகேனக்கலுக்கு காவிரி நீர்  வரத்து அதிகரித்துள்ளது.

கர்நாடக அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக வந்துக்கொண்டிருக்கிறது.

கர்நாடகா, கேரள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபிணி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 15 ந்தேதி கர்நாடக அணைகளிலிருந்து வினாடிக்கு 6 ஆயிரத்து 400 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

தொடர்ந்து அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துக்கொண்டே வந்ததால், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கபிணி அணையிலிருந்து வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 2 ஆயரத்து 426 கன அடி தண்ணீரும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.

இதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடிநீர் வந்தடைந்தது. மத்திய நீர் ஆணைய அதிகாரிகள் காவிரியாற்றில் வரும் தண்ணீரின் அளவை அளவீடு செய்து தொடந்து கண்காணித்து வருகின்றனர்.

கர்நாடகா அணைகளில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் படிப்படியாக அதிகரித்து நாளை காலைக்குள் பிலிகுண்டுலுவில் முழு தண்ணீரும் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றனர்.. கர்நாடகா அணைகளிலிருந்து திறந்துவிட்ப்பட்ட தண்ணீரால் ஒகேனக்கல்லில் உள்ள முக்கிய அருவிகளில் தண்ணீர் ஆர்பாரித்து கொட்டுகிறது.

Tags:    

Similar News