ஒகேனக்கல் அருகே போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை: கணவர் கைது
ஒகேனக்கல் அருகே குடும்பத் தகராறில் குடிபோதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.;
கத்தியால் குத்திக் கொலை செய்ய பட்ட ஜெரினா கைது செய்யப்பட்ட கழில்.
தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் அடுத்த புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மீன் வெட்டும் தொழிலாளி ஜெரினா, இவருடைய கணவர் கழில். இவர் மீன் வெட்டுதல் மட்டும் ஆயில் மசாஜ் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்படுவது வழக்கம். இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் இருவருக்கும் மீண்டும் ஏற்பட்ட குடும்பத் தகராறில் குடிபோதையில் இருந்த கழில் அவருடைய மனைவி ஜெரினாவை கத்தியால் குத்தியுள்ளார்.
இதில் ஜெரினா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவலறிந்து வந்த ஒகேனக்கல் காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கொலையாளி கழிலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிபோதையில் கணவர் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.