ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு நீர் வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு, காவிரியில் வினாடிக்கு நீர் வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.;

Update: 2021-09-26 04:45 GMT

கோப்பு படம் 

தென்மேற்கு பருவமழை கர்நாடகா, கேரள மாநிலங்களில் மழை பெய்து வந்தது. இதன் காரணமாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதால் . அதிகளவில் தண்ணீர் திறக்க பட்டது. இதனால் நீர் வரத்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது மழை குறைவு காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.

இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது வினாடிக்கு தற்பொழுது அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைத்து விடப்பட்டுள்ளது. நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று காலை 8மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வழக்கத்தைவிட குறைவாக கொட்டுகிறது.காவிரி ஆற்றில் நீர்வரத்தை காவிரியின் நுழைவிடமான தமிழக கர்நாடக எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News