ஒகேனக்கல்லில் நீர்வரத்து 3 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
கர்நாடகாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், ஒகேனக்கல்லில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்தாக உள்ளது.;
கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக அங்கு உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க துவங்கி உள்ளதால், அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
கிருஷ்ணராஜ சாகர் அணை:
மொத்த கொள்ளளவு 124.80 அடி
தற்போதைய நீர் மட்டம் 89.62 அடி
நீர்வரத்து 6039 கன அடி
நீர் வெளியேற்றம் 1426 கன அடி
கபிணி அணை:
மொத்த கொள்ளளவு 84.00 அடி
தற்போதைய நீர் மட்டம் 78.71 அடி
நீர்வரத்து 11628 கன அடி
நீர் வெளியேற்றம் 700 கன அடி
இன்று காலை நிலவரப்படி இரண்டு அணைகளில் இருந்து மொத்தமாக வெளியேற்றப்படும் நீரின் அளவு 2 ஆயிரத்து 126 கன அடியாக உள்ளது. எனவே, எந்த நேரமும் தமிழகத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.