ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து 600 கனஅடியாக நீடிப்பு !

Update: 2021-04-07 12:30 GMT

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகில் உள்ள ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து, தொடர்ந்து 4வது நாளாக விநாடிக்கு 600 கனஅடியாக நீடித்து வருகிறது.

இதே போன்று மேட்டூர் அணைக்கு நேற்று 79 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலையும் அதே அளவில் நீடிக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்தை காட்டிலும் திறப்பு அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 98.85 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 98.73 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 63.20 டி.எம்.சியாக உள்ளது.

Tags:    

Similar News