வாட்டி வதைக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க பலர் ஒகேனக்கல் அருவியை நோக்கி குவியத் துவங்கியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு தரைக்காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடந்த 2 நாட்களாக வெயில் வழக்கத்தை விட சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. காலை 10 மணிக்கு வெளியில் தலை காட்ட முடியாத அளவிற்கு வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வாட்டி வதைக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க பலர் ஒகேனக்கல் அருவியை நோக்கி குவியத்துவங்கியுள்ளனர். தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கலில் காவிரி ஆறு செல்கிறது.இதனை கண்டு களிப்பதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கில் படையெடுப்பார்கள். அந்த வகையில் இன்று (ஏப்ரல் 2ம் தேதி) ஒகேனக்கல் அருவிக்கு காலை முதலே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது.