பென்னாகரம் அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் தற்கொலை: போலீசார் விசாரணை
பென்னாகரம் அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை;
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுக்கா பெரும்பாலை அடுத்த சின்னம் பள்ளியை சேர்ந்தவர் சரவணன் வயது 35. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். சரவணன் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார் .இதற்கு பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் விரக்தியில் இருந்த சரவணன் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.