ஒகேனக்கல் காவிரியாற்றில் குவிந்த சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் பரிசல் சவாரி

வார விடுமுறையையொட்டி ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள், குடும்பத்தோடு பரிசல் சவாரி செய்தும் குளித்தும் மகிழ்ந்தனர்.;

Update: 2022-03-20 15:30 GMT

ஒகேனக்கலில் வாரவிடுமுறையையொட்டி குவிந்த சுற்றுலாபயணிகள்

வார விடுமுறையையொட்டி, இன்று ஒகேனக்கல் காவிரியாற்றில் குவிந்த சுற்றுலா பயணிகள், குடும்பத்தோடு பரிசல் சவாரி செய்தும் காவிரியாற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

இன்று வார விடுமுறை என்பதால் ஒகேனக்கல்லில் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் மசாஜ் செய்து, மெயின்பால்ஸ், சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். அவர்கள் குடும்பத்தோடு பாறைகளுக்கு இடையே பரிசல் சவாரி செய்து ரசித்தனர்.அத்திமரத்துக்கடவு துறையிலிருந்து, பெரியபாணி, ஐந்தருவி, மணல்திட்டு வழியாக பரிசல்கள் இயக்கப்பட்டன. மக்கள் மீன் வாங்கி சமைத்து  சாப்பிட்டு மகிழ்ந்தனர். நீண்ட நாட்களுக்கு பின், ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்ததால், பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News