அட்மா திட்டத்தின் சார்பில் பென்னாகரம் வட்டாரத்தில் உழவர் திருவிழா
அட்மா திட்டத்தின் சார்பில் பென்னாகரம் வட்டாரத்தில் உழவர் திருவிழா நடைபெற்றது.
நாட்டின், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பென்னாகரம் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் சார்பில், உழவர் திருவிழா நடைபெற்றது. நகரம் அருகே சத்ய நாதபுரம் பகுதியில் நடைபெற்ற உழவர் திரு விழாவிற்கு பென்னாகரம் வேளாண்மை அலுவலர் மணிவண்ணன் தலைமை வகித்து, சொட்டுநீர் பாசன அமைப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார் .
நிகழ்ச்சியில், பென்னாகரம் வேளாண்மை உதவி இயக்குனர் புவனேஸ்வரி கலந்து கொண்டு, வேளாண்துறை திட்டங்கள் உரிய முறையை பயன்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து தோட்டக்கலைத்துறை திட்டங்கள் குறித்து, தோட்டக்கலை துணை அலுவலர் குமார், வேளாண் விற்பனை மற்றும் வணிக வரித்துறை உதவி அலுவலர் பெரியசாமி துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் உழவர் சந்தையில் விற்பனை முறைகள் குறித்தும் பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் குமார் திட்டங்கள் மற்றும் பட்டு வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அலுவலர் ரகு, கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்குதல் மற்றும் அதற்கான நெறிமுறைகள் குறித்தும்; கால்நடை துறை சார்பில் பாஸ்கர் கலந்து கொண்டு, கால்நடைகளுக்கான பருவகால தடுப்பு முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். விழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் அஸ்வினி செய்திருந்தார் விழாவில், வட்டார தொழில்நுட்ப மேலாளர் அருண்குமார் நன்றியுரை தெரிவித்தார்.