தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, ஏரியூர் பகுதியில் பாமகவினர் ஆர்பாட்டம்
தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, ஏரியூர் பகுதியில் பாமகவினர் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்ததை கண்டித்து ஆர்பாட்டம் செய்தனர்.
தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களின் 10.50 விழுக்காடு உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்ததை கண்டித்து வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தர்மபுரி நகரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞர் சங்க செயலாளர் எம். முருகசாமி தலைமை தாங்கினார். வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள் இ.மா. பாலகிருஷ்ணன், நாகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் வணங்காமுடி, பசுமை தாயக மாநில துணை செயலாளர் மாது, நிர்வாக குழு உறுப்பினர் இராமலிங்கம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரவணன், சிறப்பு மாவட்ட செயலாளர் சின்னசாமி,மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் தகடூர் தமிழன், நகர செயலாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், வழக்கறிஞர் வேல்முருகன், கதிரவன், ராஜா, சம்பத், கணேசன், பிரகாஷ், ரவி, செல்வராஜ் சின்னசாமி,கோவிந்தன், மனோகரன், கலீம், செந்தில்குமார், பிரபாகரன், காந்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.இதேபோன்று பென்னாகரம்,ஏரியூர், பாலக்கோடு, உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.