ஒகேனக்கல் பகுதியில் மான் வேட்டை: மூவரிடம் ரூ.75 ஆயிரம் அபராதம் வசூல்

ஒகேனக்கல் பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்ட மூவரிடம் ரூ.75 ஆயிரம் அபராதத்தை வனத்துறையினர் வசூலித்தனர்.

Update: 2022-03-26 06:00 GMT
மாட் வேட்டையாடியதாக பிடிபட்ட மூவர்.

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லை யொட்டி உள்ள வனப்பகுதிகளில் இரவு நேரங்களில் புள்ளி மான் வேட்டையாடப்படுவதாக, வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

ரேஞ்சர் சேகர் தலைமையில் கார்டு கனக ராஜ், வனக்காப்பாளர் செல்வகுமார், ப்ரீத்தி, சக்கரவர்த்தி, சின்னசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் ஒட்டப்பட்டி, காப்புக்காடு, நாடார் கொட்டாய் காவிரி கரையோர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வனத்துறையினரை கண்டதும் கும்பல் ஒன்று தப்பியோட முயற்சித்தனர். மூன்று பேரை வனத் துறையினர் பிடித்து விசாரித்தனர். ஊட்ட மலை அடுத்த நாடார் கொட்டாய் பகுதியை சேர்ந்த ராமன் மகன் அம்சராஜ், 28, ரங்கநாதன் மகன் ஐயப்பன், 19, நல்லம்பள்ளி அடுத்த தொப்பையாறு பகுதியைச் சேர்ந்த கோவிந்த ராஜ் மகன் கண்ணன், 26, என தெரியவந்தது.

தர்மபுரி மாவட்ட வன அலுவலர் கே.வி.ஏ.நாயுடு உத்தரவின் படி வனப் பகுதியில் மானை வேட்டையாடிய மூவரிடமிருந்து தலா, 25 ஆயிரம் என, 75 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்தனர்.

Tags:    

Similar News