தர்மபுரியில் தா.பாண்டியன் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிப்பு

தர்மபுரியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பண்டியன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.;

Update: 2022-02-27 07:00 GMT

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு தினம் தர்மபுரியில் அனுசரிக்கப்பட்டது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாஜி மாநில செயலாளரும், மாஜி எம்பியும், 60 ஆண்டுகள் தமிழக அரசியல் பணியாற்றிய தா.பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு தினம்  தர்மபுரியில் அனுசரிக்கப்பட்டது.

தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் மணி தலைமை வகித்தார்.மாவட்ட பொருளாளர் மாதேஸ்வரன் தா.பாண்டியன் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.மாவட்டச் செயலாளர் தேவராசன், மூத்த நிர்வாகி அப்புனு ஆகியோர் அஞ்சலி செலுத்தி பேசினர்.

இதில் ஏஐடியூசி மாவட்ட துணைத் தலைவர் சுதர்சனன்,உள்ளாட்சி பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் மனோகரன்,தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாவட்டக்குழு உறுப்பினர் வணங்காமுடி, நிர்வாகி சின்னராசு, அனைத்திந்திய மாணவர் பெருமன்ற பொறுப்பாளர் தமிழமுதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செய்தனர்.

Tags:    

Similar News