பென்னாகரத்தில் பைக் திருடன் கைது :7 பைக்குகள் பறிமுதல்
பென்னாகரத்தில் பைக்குகள் திருடியதாக ஒருவரை போலீசார் கைது செய்து 7 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.;
கலையரசன்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் காவல் உதவி ஆய்வாளர் பாலாஜி உள்ளிட்ட போலீசார் பென்னாகரம்-ஏரியூர் செல்லும் சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அதிவேகமாக வந்த இரு சக்கர வாகனத்தில் வந்தவரை பிடித்து இரு சக்கர வாகனம் குறித்து ஆவணங்கள் கேட்கும் போது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறவே, போலீசார் தீவிர விசாரணையில் அவர் பென்னாகரம் போடூர் பகுதியை சேர்ந்த ராஜகோபால் மகன் கலையரசன்,வயது 23.என்பது தெரியவந்தது.
மேலும் ஒகேனக்கல் தர்மபுரி உள்ளிட்ட இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து பென்னாகரம் போலீசார் கலையரசனை கைது செய்து அவரிடமிருந்து அப்பாச்சி ஸ்ப்ளெண்டர் உள்ளிட்ட ஏழு பைக்குகளை பறிமுதல் செய்தனர்.