கொய்யாவில் விண் பதியம்: விவசாயிகளுக்கு செயல்முறை விளக்க பயிற்சி
பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு கொய்யாவில் விண் பதியம் பற்றி செயல்முறை விளக்க பயிற்சி நடைபெற்றது.
திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு பயின்று வரும் மாணவியர், தருமபுரி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையம் பாப்பாரப்பட்டியில், ஊரக தோட்டக்கலை பணி அனுபவத்திற்காக இரண்டு மாதம் பயிற்சி பெற வந்துள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக அங்குள்ள விவசாயிகளுக்கு கொய்யாவில் விண் பதியம் பற்றி செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளித்தனர்.
கூடுதலாக, விண்பதியம் செய்வதால் வரும் நன்மைகள்:
1.இந்த நுட்பம் மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்குப் பதிலாக சில வாரங்களில் நல்ல அளவிலான தாவரத்தை உருவாக்குகிறது
2. தாய் செடிக்கு குறைந்தபட்ச இடையூறு மற்றும் எதிர்மறையான விளைவு இல்லை
3. இனப்பெருக்கத்தின் போது, தாய் செடி மற்றும் புதிய தாவரம் இரண்டும் தொடர்ந்து வளரும்
4. புதிய தாவரமானது தாய் செடிக்கு நிகரான குணாதிசயங்களைக் கொண்டிருக்கும்
5. நல்ல அளவிலான தாவரங்களைப் பயன்படுத்தும் போது வெற்றி விகிதம் அதிகமாக இருக்கும்
6. அதிக வேகமான மற்றும் வலிமையான வேர் வளர்ச்சி
7.அதிக மகசூல் பெறலாம்
ஆகியவற்றை விரிவாக கூறி விளக்கம் அளித்தனர்.
இப்பயிற்சியில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர்.