ஒரு வாரத்தில் கடலில் கலக்கும் 9 டிஎம்சி தண்ணீர்: ஜி.கே.மணி பேட்டி

ஒரு வாரத்தில் மட்டும் 9 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

Update: 2021-11-16 06:00 GMT

ஒகேனக்கல் பகுதியில் ஆய்வு செய்த பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினரும் பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி.

தர்மபுரி பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினரும் பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி ஒகேனக்கல் பகுதியில் ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், வெள்ளப் பெருக்கில் ஒகேனக்கல்லில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. காவிரிஆற்றில் வருகின்ற தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு சென்றடைகிறது.

பிலிகுண்டு பகுதியில் இன்று 47 ஆயிரம் கன அடி தண்ணீர் அளவிடப்பட்டுள்ளது. இங்கிருந்து செல்லும் தண்ணீர் மேட்டூர் அணைக்கு செல்கிறது மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து 45 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. ஒரு வார காலத்தில் மட்டும் 9 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்துள்ளது. கடலுக்கு வீணாக செல்லும் உபரி நீரை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் நீரேற்று திட்டத்தை செயல்படுத்தி நிறைவேற்ற வேண்டும் என தமிழக முதலமைச்சரிடம் ஒகேனக்கல் உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.

ஆய்வின்போது தருமபுரி எம்.எல்.ஏ.எஸ்.பி.வெங்கடேஸ்வரன், முன்னாள் பாமக மாவட்டசெயலாளர் பெரியசாமி, முருகசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News