ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 57 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து விநாடிக்கு 50 ஆயிரம் கன அடியிலிருந்து 57 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

Update: 2021-11-19 04:15 GMT

ஓகேனக்கல்லில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு.

தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கலில் நீர்வரத்து என்பது அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்று மாலை நேரத்தில் விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து அதிகரித்து தற்போது விநாடிக்கு 57 ஆயிரம் கன அடியாக உள்ளது.

இதனால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகள், நீர்வீழ்ச்சிகளை மூடியபடி தண்ணீர் செல்கின்றன. கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் ஆகிய இரு அணைகள் முழு கொள்ளளவை எட்டிய நிலையிலும் தமிழகத்திற்கு வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 20 ஆயிரம் கன அடியாகவே உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தமிழகத்திற்கு கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் உபரி நீரின் அளவு குறைத்து வெளியேற்றப்பட்டு வந்தாலும்கூட தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக வருவதால் ஐந்தாவது நாளாக பரிசல் இயக்க தடை நீடித்து வருகிறது சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆற்றங்கரை ஓரங்களிலும் குளிக்க தடை தொடர்ந்து நீடித்து வருகிறது.

Tags:    

Similar News