தர்மபுரி அருகே ரூ.6 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி

மேல்பூரிக்கல் கிராமத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிக்கு எம்எல்ஏ வெங்கடேஷ்வரன் அடிக்கல் நாட்டினார்.;

Update: 2022-03-01 05:15 GMT

மேல்பூரிக்கல் கிராமத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிக்கு எம்எல்ஏ வெங்கடேஷ்வரன் அடிக்கல் நாட்டினார்.

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி யூனியன், மானியதஅள்ளி பஞ்சாயத்து, மேல்பூரிக்கல் கிராமத்தில் யூனியன் பொது நிதியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. தர்மபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஷ்வரன் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். இதில் நல்லம்பள்ளி யூனியன் சேர்மன் மகேஷ்வரிபெரியசாமி, மாவட்ட அமைப்பு செயலாளர் ப.சண்முகம், மாவட்ட துணை செயலாளர் த.காமராசு, ஒன்றிய செயலாளர்கள் அறிவு, ராஜீவ்காந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News