பள்ளி மாணவி கடத்தல்: டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது
பள்ளி மாணவி கடத்தல் போலீசாரால் தேடப்பட்ட டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது.;
தர்மபுரிமாவட்டம், ஏரியூர் அடுத்த நாகமரையை சார்ந்தவர் சின்னமுத்து மகன் விஜய் வயது 24 . கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த நெருப்பூர் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை கடந்த 26 ஆம் தேதி கடத்தி சென்று விட்டதாக பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த டிரைவர் விஜய்யை பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.