பாலியல் தொல்லை: முதியவர் போக்சோ சட்டத்தில் கைது
ஒகேனக்கல்லில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த 65 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;
தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்த பெரியூரை சேர்ந்தவர் ஜெய்கிருஷ்ணன் வயது 65. இவர் ஒகேனக்கல் வனப்பகுதியில் மாடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் ஒகேனக்கல் பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை வீட்டில் யாரும் இல்லாதபோது முதியவர் ஜெய்கிருஷ்ணன் பாலியல் தொல்லை தந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த 65 வயது முதியவர் ஜெய்கிருஷ்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.