கம்பை நல்லூர் அருகே பெண் தற்கொலை

கம்பை நல்லூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-10-18 17:30 GMT

பைல் படம்.

கம்பைநல்லுார் அடுத்த கடம்பரஹள்ளியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சித்ரா, வயது  38. தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த ஆறு மாதங்களாக சித்ரா மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று வீட்டில் நைலான் கயிற்றால் சித்ரா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சித்ராவின் அண்ணன் சென்னகிருஷ்ணன் அளித்த புகார்படி, கம்பைநல்லுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News