கள்ளத் தொடர்பு விவகாரத்தில், ரவுடியை கொலை செய்த தந்தை மகன் கைது

சிட்லிங் மலை கிராமம் பகுதியில் கள்ளத் தொடர்பு விவகாரத்தில், ரவுடியை வெட்டிக் கொலை செய்த, தந்தை மகனை காவல் துறையினர் கைது செய்தனர்

Update: 2021-10-20 18:15 GMT

கொலை செய்யப்பட்ட பாபுராஜ்

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சேலூர் வனப் பகுதியில் கடந்த 15ஆம் தேதி முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில், 40 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இந்த தகவல் அறிந்து காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இறந்து கிடந்தவர் யார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இறந்து கிடந்தவர் சேலம் மாவட்டம் கூட்டாத்துப்பட்டி யைச் சேர்ந்த பாபு ராஜ் என்பதும், இவர் மீது கரியபட்டி காவல் நிலையத்தில் கொலை வழக்கு இருந்ததும் தெரிய வந்தது.

இந்த கொலை குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திய போது, சிட்லிங் பகுதியில் அருள்வாக்கு கூறி வரும் விஜியகுமார் என்பவருக்கும், வேலனூரைச் சேர்ந்த தீர்த்தம்மாள் என்ற பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் பாபுராஜ்க்கும், தீர்த்தம்மாளுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்தது.

இதனை தொடர்ந்து விஜயகுமாரிடம் விசாரணையில், விஜயகுமார் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். தொடர்ந்து பாபுராஜ் தன்னை மிரட்டியதால் அச்சமடைந்து, விஜயகுமாரை பாபுராஜ் வரவழைத்து, அதிக அளவில் மது அருந்தி வைத்து, பின்னர் அவரை கொலை செய்ததாக ஒப்பு கொண்டுள்ளார்.

மேலும் இந்த தடயங்களை அழிக்க அவரது மகன் விக்னேஷ் உதவி செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அரூர் காவல் துறையினர் விஜயகுமார் மற்றும் அவரது மகன் விக்னேஷை கைது செய்தனர். மேலும் மலை கிராமத்தில் கள்ளத் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையில், தந்தை, மகன் இருவரும் சேர்ந்து ரவுடியை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News