அரூர் பகுதியில் ராகி அறுவடை பணி தீவிரம்

தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியில் ராகி அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2021-04-17 06:20 GMT

அறுவடைக்கு தயாராக உள்ள ராகி

தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியில் ராகி அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.மாவட்டத்தில், தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், காரிமங்கலம், மொரப்பூர் உள்ளிட்ட பகுதியில் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் ராகி பயிரிட்டுள்ளனர்.

தருமபுரி மாவட்டம் வானம் பார்த்த பூமியாகத்தான் உள்ளது. இதனால் மானாவரி நிலங்களில் ராகியை அதிகளவு விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். அந்த வகையில், ஒரு ஏக்கருக்கு மானாவாரியாக இருந்தால் 4 கிலோவும், நன்செய் பயிராக இருந்தால் 2 கிலோவும் விதைப்பதற்கு தேவைப்படுகிறது.

120 நாள் பயிர் என்பதால் விவசாயிகள் அதிகளவு ராகியை சாகுபடி செய்து வருகின்றனர். அதே போன்று அரூர் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட ராகி பயிர்களை, தற்போது விவசாயிகள் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News