கம்பை நல்லூர் அருகே நிலத்தகறாறு: 5 பேர் மீது போலீசார் வழக்கு

கம்பை நல்லூர் அருகே நிலத்தகறாறில் மோதிக்கொண்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.;

Update: 2021-12-07 04:45 GMT
பைல் படம்.

தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த பாமாண்டப்பட்டியை சேர்ந்தவர் ரீனா,வயது 23, இவருக்கும், அதேப் பகுதியை சேர்ந்த உறவினர் வடிவேல் என்பவரது குடும்பத்திற்கும் நிலம் சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.

இன்று இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு, தேங்காய் உரிக்கும் கத்தி, விறகு கட்டை ஆகியவற்றால் மோதிக் கொண்டனர். இதில், ரீனா அவரது தாய் பழனியம்மாள், வயது 40, காயமடைந்தனர்.

இது குறித்து ரீனா மற்றும் மலர், வயது 45, ஆகிய இருவரும் தனித்தனியாக கம்பைநல்லுார் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வடிவேல், 57, மலர், வெங்கடேசன், 27, ரீனா, பழனியம்மாள் ஆகிய ஐந்து பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News