கடலூரில் அ.தி.மு.க. உட்கட்சித் தேர்தல் பிரச்சினையில் கோஷ்டி மோதல்

கடலூரில் அ.தி.மு.க. உட்கட்சித் தேர்தல் பிரச்சினையில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 5 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2021-12-21 03:55 GMT

கடலூரில் அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

கடலூரில் அ.தி.மு.க. நான்கு மாவட்டங்களாக செயல்பட்டு வருகிறது, அ.தி.மு.க. உட்கட்சித் தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கடலூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் எம். சி. சம்பத் தலைமையில் உட்கட்சி தேர்தலுக்கான மனு வழங்கும் நிகழ்ச்சி கடலூர்  பாதிரிகுப்பத்தில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. 

வடக்கு மாவட்ட கழகத்தில் புதிய நிர்வாகிகள் நியமிப்பதற்கான பணிகள் குறித்து விவாதிக்கப்படாக கூறப்படுகிறது, இதில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக முன்னாள் அமைச்சர் எம்.சி சம்பத்தின் ஆதரவாளர்கள் 2 கோஷ்டிகளாக பிரிந்து மோதி கொண்டனர்.

இதில் மாவட்ட எம்.ஜி.ஆ.ர் மன்ற செயலாளர் சேவல் குமார் தரப்பு ஒரு கோஷ்டியாகவும், நகர துணைச் செயலாளர் கந்தன் தரப்பு ஒரு கோஷ்டியாகவும் தாக்கிக் கொண்டனர்.இதில் இருதரப்பிலும் 5க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இரண்டு தரப்பிலும் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

கோஷ்டி மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து கடலூர் மாவட்டஅ.தி.மு.க. அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க.வினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அசம்பாவிதம் ஏதும் நடக்காதவாறு கடலூர் அ.தி.மு.க. அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News