பொள்ளாச்சி அருகே சாலையில் குறுக்கே வந்த மான் மோதி இருவர் படுகாயம் ; மான் உயிரிழப்பு

Coimbatore News- பொள்ளாச்சி அருகே சாலையில் டூவீலரில் சென்ற போது குறுக்கே வந்த மான் மோதியதால் இருவர் படுகாயமடைந்தனர். இதில் மான் உயிரிழந்தது.;

Update: 2024-02-03 10:45 GMT

Coimbatore News- விபத்தில் மான் உயிரிழப்பு

Coimbatore News, Coimbatore News Today- கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானை, புலி, சிறுத்தை, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள இந்த காப்பகத்தின் சில பகுதிகளில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.

இங்குள்ள கிராமங்களில் உள்ள மக்கள் பிரதானமாக விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீருக்காக வன விலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி கிராம பகுதிகளுக்குள் நுழைந்து வருகின்றன.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பகல் நேரங்களிலேயே வனவிலங்குகள் கிராம பகுதிக்குள் நுழைந்து வருவது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஆனைமலையை அடுத்த ஆலங்கண்டி பகுதியில் ஆழியாரில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வீரக்குமார் என்பவர் தன் மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக திடீரென சாலையின் குறுக்கே வந்த மான் இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்துள்ளானது. இதில் வாகன ஓட்டுனர் நிலை தடுமாறியதால் இரு சக்கர வாகனத்தில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் இருவரும் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தனர். மேலும் விபத்தில் அடிபட்ட மான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இது குறித்து வனத்துறை மற்றும் காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News