ஆனைமலையில் 150 ஹெக்டர் பரப்பளவில் விதைப்பந்துகள் தூவும் பணி துவக்கம்..!

விமானப்படை மற்றும் தேசிய மாணவர் படையின் அதிகாரிகள் தலைமையில் இந்தப் பணி நடைபெற்றது.

Update: 2024-06-08 07:45 GMT

விதைபந்து தூவும் பணி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி சரக்கத்தில் தம்மம்பதி பகுதியில் 120 ஹெக்டர் பரப்பளவிலும், சர்க்கார்பதி பகுதியில் 30 ஹெக்டர் பரப்பளவிலும் கருவேல மரம் மற்றும் உன்னி செடிகள் சமீபத்தில் அகற்றப்பட்டன. இப்பகுதிகளில் புதிதாக மரங்களை வளர்க்க விதைப்பந்துகள் தூவ வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள என்.சி.சி. மாணவர்கள் சுமார் 300 பேர் நேற்று வனப்பகுதிகளில் விதை பந்துகளை தூவினர்.

ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் தலைமையில் விமானப்படை மற்றும் தேசிய மாணவர் படையின் அதிகாரிகள் தலைமையில் இந்தப் பணி நடைபெற்றது. இதுகுறித்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் கூறுகையில், வனப்பகுதிகளில் கருவேல மரம் மற்றும் கலைச் செடிகளை அகற்றி நல்ல மரங்களை நடவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்டிருந்த சுமார் 13 லட்சம் விதைப்பந்துகள் என்.சி.சி. மாணவர்களைக் கொண்டு வனப்பகுதியில் தூவப்பட்டன. வாகை, பூவரசு, இலந்தை, புளி, சந்தனம், ஆல மட்டும் அரச மரங்களின் விதைகள் கொண்டு விதைப்பந்துகள் தயார் செய்யப்பட்டிருந்தன.

இந்த பணி அடுத்தடுத்த கட்டங்களாக மீண்டும் தொடர்ந்து நடக்கும். மேலும் ஹெலிகாப்டர் மூலமாக விதைப்பந்துகளை தூவவும் திட்டமிட்டு வருகிறோம் எனத் தெரிவித்தார். பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி, டாப்ஸ்லிப் வனச்சரகர் சுந்தரவடிவேல் மற்றும் 60க்கும் மேற்பட்ட வனத்துறையினர் இப்பணியில் ஈடுபட்டனர். 

Tags:    

Similar News