கோவை மாவட்டத்தில் கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

இன்று சூறாவளி காற்றுடன் வால்பாறை நகர் பகுதியில் மழை பெய்ததால் சாலையில் ஆறு போல் ஓடியது

Update: 2023-04-23 09:30 GMT

கோவை மாவட்டம், வால்பாறை  பகுதியில் பெய்ய கோடை மழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர்

கோவை மாவட்டம் வால்பாறை மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து மூன்று தினங்களாக கொட்டித் தீர்த்த மழை இன்று சூறாவளி காற்றுடன் வால்பாறை நகர் பகுதியில் மழை பெய்ததால் சாலையில் ஆறு போல் காட்சி அளித்த தண்ணீர் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது மற்றும் இன்று ஞாயிறு விடுமுறை என்பதினால் பொதுமக்கள் வால்பாறை நகர் பகுதிகளுக்கு பொதுமக்கள் சந்தை பகுதிகளில் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்கு அவதிப்பட்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது அதிக கன மழை பெய்தால் கடை ஓரங்களில் நிற்கும் பொதுமக்கள்.

கோவையில் கோடை மழை பெய்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெப்பத்தின் தாக்கம் அதிகம் குளு, குளு கோவையில் இந்த ஆண்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. மார்ச் மாதத்தில் இருந்தே வெப்பம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். மேலும் இந்த மாதத்தில் வெயிலின் அளவு 101 டிகிரியை தாண்டியது.

இதனால் இந்த வெப்பத்தில் இருந்து காக்க மழை வராதா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் நேற்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையமும் அறிவித்து இருந்தது.இருந்தபோதிலும் கோவையில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாகதான் இருந்தது. மாலை 5 மணியளவில் லேசான மழை தூறியது. இந்த நிலையில் மாலை 5.15 மணியில் இருந்து மழை பெய்யத் தொடங்கியது. சுமார் அரை மணி நேரம் பலத்த மழை கொட்டித்தீர்த்தது.

வடவள்ளி, சாய்பாபா காலனி, வேலாண்டிபாளையம், கவுண்டம்பாளையம், வெள்ளக்கிணறு உள்பட பல்வேறு இடங்களிலும் காற்றுடனும், இடி-மின்னலுடனும் பலத்த மழை பெய்தது. சில பகுதிகளில் காற்றுடன் லேசான மழையும் பெய்தது.

இந்த மழை காரணமாக கோவையில் நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதன் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, கோவையில் கோடைகாலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் மழை பெய்தால் குளிர்ந்து விடும். தற்போது மழை பெய்து உள்ளதால், வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்காது என்று எதிர்பார்க்கிறோம் என்றனர்.




Tags:    

Similar News