திமுக சார்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணியில் கட்சி நிர்வாகிகள் தீவிரம்
2024 ல் வர உள்ள நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பூத் கமிட்டி அமைக்க இலக்கு வைத்துள்ளோம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்;
கோவை மாவட்டம், வால்பாறை நகரத்துக்கு உட்பட்ட கருமலை எஸ்டேட் பகுதியில் அக்கா மழை ஊசி மலை வெள்ளமலை பச்சமலை மற்றும் நடுமலை எஸ்டேட் பகுதியில் உள்ள பி எல் ஏ 2. பூத் கமிட்டிகள் பாக முகவர்கள் கருமலை பஜாரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கோவை மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் செயற்குழு உறுப்பினர் அமுத பாரதி முன்னிலையிலும் வால்பாறை நகர கழக செயலாளர் சுதாகர் ஏற்பாட்டில் இக்கூட்டம் நடைபெற்றது .
இதில் 12 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் அன்பரசு, 13 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி, ஆனைமலை தோட்ட தொழிலாளர்கள் முன்னேற்றக் கழகம் சௌந்தர பாண்டியன், நகரத் துணைச் செயலாளர் சரவணன் பாண்டியன், தொழில் நுட்ப அணி ஜெயராமன், வார்டு கழக செயலாளர் மாரிமுத்து ,வரட்டுப்பாறை முருகேசன், பச்சமலை சுப்புலட்சுமி, கருமலை துணை செயலாளர் வேல்மயில் கோவிந்தன், சக்திவேல் மற்றும் புக் கமிட்டிகள் நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க, அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக-வில் 1 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியை, அந்த கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் ஏப்ரல் 4 -ஆம் தேதி தொடக்கி வைத்தார். மறைந்த முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி ஜுன் 3ம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் புதிதாக 1 கோடி உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி திமுக பயணிக்க துவங்கி உள்ளது.
விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. இதற்கான களப்பணியில் தமிழக அரசியல் கட்சிகளும் இறங்கிவிட்டன.. மாறி மாறி ஆட்சி செய்யும், திராவிட கட்சியான திமுக மற்றும் அதிமுக இடையேயான போட்டிகள் ஒவ்வொருமுறையும் வெளிப்படும்.
அந்தவகையில், தமிழகத்தை யார் கைப்பற்ற போவது என்ற போட்டி இந்த முறையும் கிளம்பி உள்ளது.. எனவே இரு தரப்பிலுமே கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. இதில், திமுக கூட்டணிவில், தற்போதுள்ள கூட்டணியே இனியும் தொடரும் என்றும், வேண்டுமானால் மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இணையக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டு மொத்த அளவில் வெற்றி பெற்றால் தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும். இந்தியாவை காப்பாற்ற திமுகவினர் தயாராக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்; இந்தியாவைக் காப்பாற்ற திமுகவினர் அனைவரும் தயாராக வேண்டும். நாட்டை காப்பாற்ற தேர்தலுக்கான பணிகளை விரைந்து செய்ய வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் அகில இந்திய அளவில் வெற்றி பெற்றாக வேண்டும்.
ஒன்றிய அரசு தேவையான உதவிகளை வழங்காமல் இருந்தாலும் சிறந்த மாநிலமாக வளர்ந்துள்ளோம். நான் எப்போதும் அதிகம் பேசுவது இல்லை, செயலில் தான் திறமையை காட்ட வேண்டும் என்பது என் எண்ணம். 2024ல் வர உள்ள நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பூத் கமிட்டி அமைக்க இலக்கு வைத்துள்ளோம்.
அப்போது தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும். இந்த இரண்டு ஆண்டு கால ஆட்சி திராவிட ஆட்சி என்பதை விட இது நம்முடைய ஆட்சி. இந்த இரண்டு ஆண்டு ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பற்றாக்குறை இருந்தாலும், மத்திய அரசு தேவையான அளவுக்கு துணை நிற்காவிட்டலும் இந்தியாவில் சிறந்த மாநிலமாக, சிறந்த முதலமைச்சர் கொண்ட மாநிலமாக பெயர் பெற்றுள்ளோம். அண்ணா பிறந்த நாள் அன்று உரிமைதொகை மாதம் ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
பெண்கள் முன்னேற்றத்திற்கு பல திட்டங்களை தீட்டி வந்தாலும், மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்க கூடாது என்று செயல்பட்டு வருகிறோம். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும். இந்தியாவை காப்பாற்ற திமுகவினர் தயாராக இருக்க வேண்டும். உங்களை ஊக்கப்படுத்தி கொள்ள வேண்டும். 2024 நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற உழைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.