வால்பாறை: காட்டுமாட்டிற்கு உடல்நல பாதிப்பு - வனத்துறை தீவிர சிகிச்சை

கோவை வால்பாறை பகுதியில், எழுந்து நடக்க முடியாமல் இருந்த காட்டு மாட்டிற்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Update: 2021-06-25 15:11 GMT

வால்பாறையில், உடல் நலம் பாதித்த காட்டுமாட்டிற்கு சிகிச்சை அளித்த வனத்துறையினர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் யானை, புலி, சிறுத்தை, காட்டுமாடு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. வால்பாறை வனச்சரகம் ஸ்டான்மோர் எஸ்டேட் சவரங்காடு பகுதியில், 6 வயது மதிக்கதக்க ஆண் காட்டுமாடு ஒன்று எழுந்து நடக்க முடியாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கால்நடை மருத்துவரை அழைத்துச்சென்று காட்டு மாட்டிற்கு முதலுதவி அளிக்கப்பட்டது. தொடர்ந்து காட்டு மாட்டிற்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். காட்டுமாட்டினை,  மனித - வன உயிரின மோதல் தடுப்புக்குழுவினர் கண்காணித்து வருகின்றனர். காட்டு மாட்டிற்கு உடல் நலக்குறைவிற்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News