கோவை அருகே ஊராட்சி துணை தலைவர் பதவிக்கு திமுக உறுப்பினர் போட்டியின்றி தேர்வு
கோவை அருகே ஊராட்சி துணை தலைவர் பதவிக்கு திமுக உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இரமண முதலி புதூர் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் மொத்தாம் ஒன்பது வார்டுகள் உள்ளன. கடந்த முறை நடந்த ஊரக ஊராட்சி தேர்தலில் திமுகவை சேர்ந்த இரண்டு பேரும், அதிமுகவை சேர்ந்த ஏழு பேரும் வெற்றி பெற்று கவுன்சிலர்களாக உள்ளனர். இந்த நிலையில் அதிமுகவை சேர்ந்த தனபாக்கியம் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவராக அதிமுகவை சேர்ந்த சரவணக்குமார் என்பவர் இருந்து வந்தார்.
இந்த நிலையில் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருந்த சரவணக்குமார், தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக கூறி கடந்த 18ம் தேதி திடீரென தனது பதவியை ராஜினமா செய்தார். இதனால் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுகத் தேர்தல் நடந்த கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்திரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆனைமலை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்த் மற்றும் மோகன்பாபு தலைமையில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஒன்பது கவுன்சிலர்களில் ஆறு கவுன்சிலர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
அப்போது வேறு யாரும் எதிர்த்து போட்டியிடாததால், திமுகவை சேர்ந்த கவுன்சிலர் திலகவதியை ஊராட்சி மன்ற துணைத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதன் காரணமாக அப்பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.