பொள்ளாச்சி அரசு பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ; 2 மாணவர்கள் பலி..!
இரு சக்கர வாகனம் எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.;
இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் ஆறு பேர் கொண்ட குழுவினர் இன்று விடுமுறை நாள் என்பதால், இருசக்கர வாகனங்களில் ஆழியார் அணை, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா வந்ததாக தெரிகிறது. அப்போது நா.மு.சுங்கம் அருகே ஒரு இருசக்கர வாகனத்தில் கல்லூரி மாணவியும், மாணவரும் வரும் போது எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த கல்லூரி மாணவி காவிய ஸ்ரீ மற்றும் மாணவன் சபரி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆழியார் காவல் நிலைய காவல் துறையினர் இறந்த மாணவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்து மீது மோதியதில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.