தங்கத்தில் ஜல்லிக்கட்டு, தை பொங்கல், உழவர்கள் ஓவியம்: கோவை ஓவியர் அசத்தல்

700 மில்லி கிராம் தங்கத்தைக் கொண்டு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க ஓவியம் ஒன்றை வரைந்திருக்கின்றார்

Update: 2024-01-06 06:00 GMT

மெமரி கார்டுகளில் வரையப்பட்டுள்ள தங்க ஓவியம்.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் யு. எம். டி. ராஜா. தங்க நகை தொழிலாளியான இவர், ஓவியம் வரைதல் மற்றும் கலை பொருட்கள் உருவாக்குவதில் ஆர்வம் கொண்டுள்ளார். இவர் அடிக்கடி கலை பொருட்கள் மூலம் விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 700 மில்லி கிராம் தங்கத்தைக் கொண்டு ஓவியம் ஒன்றை வரைந்துள்ளார்.

தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றும் வகையிலும், ஜல்லிக்கட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையிலும், உழவர்களை வணங்கும் விதமாகவும் மெமரி கார்டுகளின் பின் பகுதியில் தங்கத்தில் ஓவியத்தை வரைந்து அசத்தியுள்ளார்.

இரண்டு நாட்கள் இதற்காக செலவழித்து இந்த ஓவியங்களை வரைந்து இருப்பதாக யு.எம்.டி.ராஜா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News