போலீஸ் எனக் கூறி மிரட்டி பணம் வசூல் செய்த பா.ஜ.க பிரமுகர் கைது

கோவையில் போலீஸ் அதிகாரி எனக் கூறி மிரட்டி பணம் வசூல் செய்த பா.ஜ.க பிரமுகர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2024-07-10 12:34 GMT

கைது செய்யப்பட்ட பெருமாள்

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். 50 வயதான இவர் காவலராக இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர். கடந்த 1997 ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்த இவர், பல்வேறு புகார்கள் காரணமாக கடந்த 2010 ம் ஆண்டில் பணிநீக்கம் செய்யப்பட்டார். இவர் பா.ஜ.க முன்னாள் ராணுவ பிரிவு துணைத் தலைவராக இருந்து உள்ளார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொண்டாமுத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பேரூர் படித்துறை அருகே உள்ள அரசு மதுபான டாஸ்மாக் கடையின் அருகே உள்ள பெட்டிக் கடைக்கு சென்ற பெருமாள், பேரூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எனக் கூறியுள்ளார்.

மேலும் கடை உரிமையாளர் வெற்றிவேல் (எ) சுரேந்திரன் என்பவரிடம் குட்கா விற்பனை செய்வதாக பொய் வழக்கு பதிவு செய்வேன் என மிரட்டி, 15 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துள்ளார். பின்னர் அவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு உக்கடம் காவல் நிலையம் முன்பு இறக்கி விட்டு சென்று உள்ளார். இந்த நிலையில் வெற்றிவேல் பேரூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், பெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News