லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் இன்ட்சிட்டி சார்பில் மதிய உணவு வழங்கல்
லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் இன்ட்சிட்டி சார்பில் கோவை ஆர் எஸ் புரத்தில் உள்ள ஈரநெஞ்சம் முதியவர் இல்லத்தில் நடைபெற்றது;
லயன்ஸ் இன்டர்நேஷனல் மாவட்டம் 324 டி லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் (INDCITY) இன்ட்சிட்டி சார்பில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் இன்ட்சிட்டி சார்பில் கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள ஈரநெஞ்சம் முதியவர் இல்லத்தில் லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் இன்ட்சிட்டி தலைவர் அரிமா சதீஷ் அவர்களின் தாயார் ராதா அம்மையாரின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதிய உணவு வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராக முதல் துணை மாவட்ட ஆளுநர் அரிமா சண்முகசுந்தரம் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். இதில் மண்டல தலைவர் ஜெயக்குமார் லயன்ஸ் கிளப் ஆப் இன் சிட்டி செயலாளர் ஜெகதீஷ் பொறியாளர் சந்திரசேகர் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை லயன்ஸ் கிளப் ஆப் ஜூபிடர் தலைவர் அரிமா பொன்னம்பலம் செய்திருந்தார்.
பன்னாட்டு அரிமா சங்கங்கள் (Lions Clubs International, LCI) உலகளாவிய ரீதியில் நலிந்தோர்க்கான நலதிட்டங்களை செய்துவருகிறது. மொத்தம் 203 நாடுகளில் 44,500 சங்கங்களில் 1.4 மில்லியன் உறுப்பினர்களுடன் இவ்வியக்கம் செயற்பட்டு வருகிறது.
1879 ஆம் ஆண்டு 13ம் நாள் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அரிசோனா மாநிலத்தில் சிலா ஆற்றின் கரையில் அமைக்கப்பட்டிருந்த ராணுவ முகாம் ஒன்றில் பிறந்த மெல்வின் ஜோன்ஸ் என்பவரால் 1917ம் ஆண்டு இந்த "அரிமா சங்கம்" என்ற அமைப்பு தொடங்கப் பட்டது. பின்னர் அது பல்வேறு கட்டங்களைத் தாண்டி இன்று உலகளாவிய அமைப்பாக 203 நாடுகளில் பரவி உள்ள இவ்வமைப்பு, உலகம் முழுவதும் நலிந்தோர்க்கான நலதிட்டங்களை செய்துவருகிறது