கோவை விமானப்படை சார்பில் பேரிடர் ஒத்திகை

கோவை மாவட்டம் சூலூரில் மாதம்தோறும் விமானப்படை விமானங்கள் மூலம் பேரிடர் கால ஒத்திகையானது நடத்தப்படுகிறது

Update: 2023-04-29 09:45 GMT

பேரிடர் கால ஒத்திகை சூலூரில் உள்ள பெரிய குளத்தில் நடைபெற்றது.

கோவை மாவட்டம், சூலூர், மாதம்தோறும் விமானப்படை விமானங்கள் மூலம் பேரிடர் கால ஒத்திகையானது நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த மாதத்திற்கான பேரிடர் கால ஒத்திகை சூலூரில் உள்ள பெரிய குளத்தில் நடைபெற்றது. அதன்படி தீ விபத்து ஏற்படும் போது எப்படி ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைப்பது என்பது குறித்து தத்ரூபமாக விளக்கப்பட்டது. சூலூர் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் தீ விபத்தை கட்டுப்படுத்துவது குறித்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன்படி சூலூர் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரானது, சூலூர் பெரிய குளத்திற்கு சென்று,. அங்கு வானில் வட்டமிட்டபடியே ஹெலிகாப்டரில் இருந்து 2 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட ராட்சத கொள்கலனை கயிறு கட்டி கீழே இறக்கினர்.

பின்னர் அது கீழே வந்து குளத்தில் தண்ணீரை நிரப்பியதும், மீண்டும் மேலே எடுத்து செல்லப்பட்டு, விபத்து நடந்த இடத்தில் தண்ணீரை தெளித்து தீயை அணைப்பது போன்று தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது. இந்த ஒத்திகை காட்சியை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் வியந்து பார்த்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News