கோவையில் விமானத்தை கடத்த போவதாக மிரட்டல் - சோதனையால் பரபரப்பு

Coimbatore News- கோவையில் விமானத்தை கடத்த போவதாக மிரட்டலை அடுத்து, சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-10-13 16:00 GMT

விமானத்தை கடத்தப் போவதாக மிரட்டல் ( மாதிரி படம்)

Coimbatore News, Coimbatore News Today- கோவையில் இருந்து சென்னைக்கு இன்று மாலை 4 மணிக்கு இன்டிகோ விமானம் கிளம்ப இருந்தது. இண்டிகோ 6E 848 விமானத்தில் 169 பயணிகளுடன் புறப்பட தயாரான போது, விமானத்திற்குள் கிடந்த துண்டு சீட்டு ஒன்றை விமான ஊழியர்கள் பார்த்தனர். அதில் விமானத்தை கடத்த இருப்பதாக எழுதப்பட்டு இருந்தது.

உடனடியாக இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பு கருதி உடனடியாக விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர்.

விமானத்தில் சென்னை செல்வதற்காக இருந்த உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் ஆகியோரும் விமானத்தில் இருந்து இறக்கி, விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் வழியாக அழைத்து வந்தனர். மேலும் விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட அனைத்து பயணிகளையும் , அவர்களின் உடமைகளும் மீண்டும் சோதனையிடப்பட்டது.

விமானத்தையும் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் முழுமையாக சோதனையிட்டனர். சோதனையில் அந்த மிரட்டல் துண்டு சீட்டு வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இதனையடுத்து விமானம் தாமதமாக சென்னை கிளம்பியது. 4 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் 5.30 மணிக்கு ஒன்றரை மணி நேரம் தாமதமாக கிளம்பி சென்றது. 

Tags:    

Similar News