நொய்யல் ஆற்றங்கரையில் ஆடி (18 )பெருக்கு சிறப்பு வழிபாடு

நொய்யல் ஆற்றங்கரையில் ஆடி 18 பெருக்கை முன்னிட்டு பக்தர்கள் புதுமணத்தம்பதியர், இளம் பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்;

Update: 2023-08-03 08:30 GMT

பைல் படம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே உள்ள நொய்யல் ஆற்றங்கரையில் ஆடி 18 பெருக்கை முன்னிட்டு பக்தர்கள் புதுமணத்தம்பதியர், இளம் பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.

ஆடிப்பெருக்கு  நிகழ்ச்சியில் திரண்ட பொதுமக்கள் போதுமான அடிப்படை வசதிகளை இந்து சமய அறநிலைத்துறை செய்து கொடுக்கவில்லை எனவும்  வழிபாடு செய்ய முடியாமல்  சிரமப்பட நேரிட்டதாக புகார் தெரிவித்தனர்.

அறநிலையத்துறை அதிகாரிகள் அடிப்படை வசதிகள் செய்து தராதது தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் மேலும் கடந்த   அமாவாசையின்போது திதி கொடுத்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடப்பதால் கால் வைத்து நடக்க முடியாமல் சுற்றுப்புற சுகாதார கேடு மிகவும் கேள்விக்குறியாகி உள்ளது எனவும் தெரிவித்தனர். இந்த சூழலை சரியான முறையில் கையாளாக தெரியாத இந்து சமய அறநிலைத்துறையினர் மீது கடும் அதிருப்தியை தெரிவித்தனர்.

ஆடி மாதச்சிறப்புகள்.. 

பல்வேறு திருவிழாக்கள், முக்கிய பூஜைகள்  மற்றும் தெய்வ வழிபாட்டுக்கான மாதமாக திகழ்வது ஆடி மாதம். ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு என வரிசையாக  விழாக்கள்  நடைபெறுகின்றன.

ஆடி 18, பதினெட்டாம் பெருக்கு என அழைக்கப்படும் இந்த நிகழ்வின் முக்கிய அம்சம் குல தெய்வ வழிபாடு மற்றும் நதி, ஆற்றங்கரை வழிபாட்டை நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று ஆடி பெருக்கு திருநாள் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக காவிரி கரையோர மாவட்டங்களில் மிக விமர்சையாக புதுமண தம்பதிகள் அதிகளவில் கூடி வழிபாடு நடத்தி கொண்டாடப்படுகிறது. காவிரி ஆற்றங்கரையில் புதுமண தம்பதிகள், பொதுமக்கள் காவிரி ஆற்றில் நீராடியும், புதுமண தம்பதிகள் புத்தாடை உடுத்தி புதிய மஞ்சள் கயிறு அணிவது வழக்கம்.இதற்காக ஏராளமான புதுமண தம்பதிகள் தங்களது குடும்பத்தினருடன் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்வது வழக்கம்.இதனால் குடும்பம் மற்றும் விவசாயம், தொழில் செழிக்கும் என்பது ஐதீகம்.

Tags:    

Similar News