ஒண்டிபுதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரி கருப்பு கொடி கட்டி போராட்டம்
Public Requested Fly Over Agitation மேம்பாலம் கட்டவில்லை எனில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
Public Requested Fly Over Agitation
கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் சுற்றுவட்டார பகுதியில் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் கடவு எண் 3 ரயில்வே அமைந்துள்ளது. இந்த ரயில்வே கேட் பாதையை பயன்படுத்தி, சிவலிங்காபுரம், காமாட்சி நகர், சக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் சென்று வருகின்றனர். ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 10 ஆண்டு காலமாக இந்த கோரிக்கை இருந்து வரும் நிலையில், இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படும் என அரசின் தரப்பில் முதலில் தெரிவிக்கபட்டது. இந்நிலையில் சமீபத்தில் இந்த ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படும் எனவும், மேம்பாலம் கட்டப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டது. பொது மக்கள் மூன்று கி.மீ தொலைவில் உள்ள ரயில்வே கேட்டை பயன்படுத்தி செல்லுமாறு தெரிவிக்கப்பட்டது.
ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதைக் கண்டித்தும், இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும் இன்று சூர்யா நகர் பகுதி மக்கள் 500 க்கும் மேற்பட்டோர் கைகளில் கருப்பு கொடியுடன் திரண்டனர். சூர்யா நகர் பகுதியில் உள்ள தெருக்களில் ஊர்வலமாக சென்ற அவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் கருப்பு கொடியேற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். தமிழக அரசு இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் எனவும், அதுவரை தங்களது போராட்டம் தொடரும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த பகுதியில் மேம்பாலம் இப்பகுதியில் கட்டப்படவில்லை எனில் நீண்ட தொலைவு பயணித்து செல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும், மேம்பாலம் கட்டுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இல்லையெனில் வரும் 20 தேதி ஓண்டிபுதூர் பிரதான சாலையில், இப்பகுதி மக்கள் அனைவரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.