சுவரொட்டி ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் மீது பாஜகவினர் தாக்குதல்

Coimbatore News- சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் ஏராளமான நாம் தமிழர் கட்சியினர் புகார் அளிப்பதற்கு திரண்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Update: 2024-01-14 12:30 GMT

Coimbatore News- காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை

Coimbatore News, Coimbatore News Today- பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் கோவை நீலிகோணம் பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஆசிக் மற்றும் பாலாஜி ஆகிய இருவர் பொங்கல் வாழ்த்து சுவரொட்டிகளை நள்ளிரவு ஒட்டி வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த பாஜகவை சேர்ந்த சிலர் இருவரையும் தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் ஏராளமான நாம் தமிழர் கட்சியினர் புகார் அளிப்பதற்கு திரண்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒழுங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாம் தமிழர் கட்சியினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பாஜகவினர் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்து விரைந்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தமிழர் ஓர்மையை சீர்குலைத்து மதக்கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் லாபம் அடைய துடிக்கும் பாஜகவின் இழிவான செயலை வன்மையாக கண்டிப்பதாகவும், தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பாஜக ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட மதவெறி அமைப்புகளின் வன்முறை செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது என குறிப்பிட்டுள்ள அவர் இது தான் தமிழ்நாட்டில் பாஜக வரவிடாமல் தடுக்கும் திராவிட மாடல் அரசின் செயல்முறையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் உண்மையில் இந்துத்துவ அமைப்புகளுக்கு திமுக அரசு தரும் மறைமுக ஆதரவே மாற்றுக் கட்சியினரை தாக்கும் அளவிற்கு தமிழ்நாட்டில் பாஜக வளர முக்கிய காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News