கோவை: தூய்மைப்பணியாளர்களுக்கு நோய்த்தடுப்பு உபகரணம் வழங்கிய அதிமுக எம்.எல்.ஏ.

கோவையில். தூய்மைப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள், அத்தியாவசியப் பொருட்களை, எல்எல்ஏ ஜெயராமன் வழங்கினார்.;

Update: 2021-06-09 10:55 GMT
கோவை: தூய்மைப்பணியாளர்களுக்கு நோய்த்தடுப்பு உபகரணம் வழங்கிய அதிமுக எம்.எல்.ஏ.

கோவை பீளமேடு புதூர் பகுதியில், நிவாரணப் பொருட்கள் வழங்கிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்.

  • whatsapp icon

கோவை பீளமேடு புதூர் பகுதியில், முன்களப்பணியாளர்களான தூய்மைப்பணியாளர்களுக்கு, கொரானா தடுப்பு உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கே.ஆர்.ஜெயராமன், அம்மன் அர்ஜுனன் பங்கேற்றனர்.

அப்போது, துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் அரிசி,பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தொகுப்புகள் வழங்கப்பட்டன. கொரானா ஊரடங்கு துவங்கிய நாள் முதல், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வீடு வீடாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொருட்கள் வழங்கி வருவதாகவும், பொதுமக்களுக்கு அதிமுக தொடர்ந்து உதவிக்கரம் நீட்டும் எனவும், சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன் தெரிவித்தார்.

Tags:    

Similar News