மெய்யழகன் திரைப்படம் அற்புதமான படமாக இருக்கும் : நடிகர் கார்த்தி நம்பிக்கை

Coimbatore News- மெய்யழகன் அற்புதமான படமாக இருக்கும். இந்தப் படம் திருப்திகரமாக வந்துள்ளது என நடிகர் பேசினார்.

Update: 2024-08-31 15:15 GMT

Coimbatore News- விழாவில் பேசிய நடிகர் கார்த்தி

Coimbatore News, Coimbatore News Today- மெய்யழகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கோவை கொடிசியா அரங்கத்தில் நடைபெற்றது. இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், கார்த்தி, அரவிந்த் சுவாமி, நடிகை ஸ்ரீ திவ்யா, இயக்குநர் பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கு முன்னதாக மெய்யழகன் திரைப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் திரைப்பட குழுவினர் அப்படம் குறித்த கருத்துகளை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

இதன் பின்னர் நடிகர் கார்த்தி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “எனது கல்யாணத்திற்கு பிறகு கோவையில் நடக்கும் நிகழ்ச்சி இது. கோவையில் ஆடியோ வெளியீட்டு விழா நடத்துவது அர்த்தமுள்ளதாக இருக்கும் என நடத்துகிறோம். எனது வேர்கள், உறவுகள் இங்கு தான் உள்ளது. 96 படத்தை இயக்கிய இயக்குநர் பிரேம் 6 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்கியுள்ளார். மெய்யழகன் அற்புதமான படமாக இருக்கும். இந்தப் படம் திருப்திகரமாக வந்துள்ளது.

அரவிந்த் சுவாமி உடன் போட்டி போட்டு நடிக்கவில்லை. நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கும் போது, படத்திற்கு அழகு வந்துள்ளது. நாங்கள் இரண்டு பேரும் படம் முழுக்க வருவோம். நான் ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்யவில்லை. வித்தியாசமாக கதைகளை தான் தேர்வு செய்து நடிக்கிறேன். இந்தப் படம் தஞ்சாவூரை சார்ந்த படம். இந்தப் படம் 1996 காலகட்டத்தில் நடப்பது போல எடுக்கப்பட்டுள்ளது. படம் பற்றி நானும் சொல்ல மாட்டேன். படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்தப் படம் எமோஷனாலாக இருக்கும். நாம் எல்லாரும் எமோஷனா ஆட்கள் தான்” எனத் தெரிவித்தார்.

Tags:    

Similar News