பீளமேட்டில் நாயை அடித்து கொன்றவர் மீது வழக்குப்பதிவு

Coimbatore News- பீளமேட்டில் நாயை அடித்து கொன்றவர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-02-08 12:00 GMT

Coimbatore News- பீளமேடு காவல் நிலையம்

Coimbatore News, Coimbatore News Today- கோவை பீளமேடு அடுத்த உடையாம்பாளையம் அருகே கடந்த 5ம் தேதி கால்கள் கட்டப்பட்டவாறு நாய் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து விலங்குகள் நல ஆர்வலர் பாலகிருஷ்ணன் என்பவர், இது தொடர்பாக அங்கு விசாரித்து பார்த்துள்ளார்.

உயிரிழந்த நாய் சாலையோரத்தில் சுற்றும் நாய் என்பதும் ஒரு ஆண்டுகாலம் பெண் தினமும் உணவளித்து வந்தது தெரியவந்துள்ளது. பின்னர் நாய் வீசப்பட்ட இடத்தின் அருகே வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது, இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நபர் நாயை சாக்கில் சுற்றிக்கொண்டு வந்து போட்டுச் செல்லுவது பதிவாகியுள்ளது.

இதனை எடுத்து பாலகிருஷ்ணன் உயிரிழந்த நாயை மீட்டு சீரநாயக்கன்பாளையத்தில் இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் நாயை பாதுகாப்பாக வைத்துள்ளனர். நாயின் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்த பீளமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் பீளமேடு போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து விலங்குகள் நல அலுவலர் பாலகிருஷ்ணன் கூறியதாவது, தொடர்ச்சியாக தெருவில் சுற்றி வரும் நாய்கள் இவ்வாறு கால்கள் கட்டப்படும், கழுத்து நெறிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக தொடர்ந்து காவல் நிலையம் புகார் அளித்து வருகின்றோம் என்றார்.

மேலும் இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த வகையில் உயிரிழந்த நாய்களை வைத்து காவல் நிலையத்தில் புகார் அளித்து விசாரணை நடத்தி வருகின்றோம். இதேபோன்று சாலையில் ஆதரவின்றி சுற்றி திரியும் குதிரை, கழுதை, மாடுகளை உடனடியாக கண்காணித்து நிற்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

Tags:    

Similar News