பொள்ளாச்சி மருந்து கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

பொள்ளாச்சியில் உள்ள மருந்து கடைகளில் மருந்துகள் ஆய்வாளர் தலைமையில் திடீரென ஆய்வு நடத்தினர்.;

Update: 2023-05-14 05:49 GMT

பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள மருந்து கடைகளில் மருத்துவர்களின் அனுமதி சீட்டு இல்லாமலும், காலாவதியான மருந்துகள் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து பொள்ளாச்சி நகர மேற்கு காவல் ஆய்வாளர் மணிக்குமார், பொள்ளாச்சி சரக மருந்துகள் ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் காவல்துறையினர் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் பொள்ளாச்சி பகுதிகளில் மொத்தம் 11 கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது மருத்துவர்களின் அனுமதி சீட்டு இல்லாமல் மருந்து விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தினர்.

இதுகுறித்து பொள்ளாச்சி சரக மருந்துகள் ஆய்வாளர் ராஜேஷ் கூறுகையில், மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குனர் குருபாரதி அறிவுறுத்தலின் பேரில் பொள்ளாச்சி கோட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட மருந்து கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது. போதை தரும் இருமல் டானிக், மாத்திரைகள், தூக்க மாத்திரைகள், வலி நிவாரண மாத்திரைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. மேலும் கடைகளில் அந்த வகையான மருந்துகள் உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டன.

இதற்கிடையே மருத்துவர்களின் அனுமதி சீட்டு இல்லாமல் மருந்து சீட்டு வழங்கப்படுகிறதா என்றும் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. மருத்துவர்களின் அனுமதி சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொள்ளாச்சி பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று கூறினார்

Tags:    

Similar News